புதன், 16 டிசம்பர், 2015

கரூர் மாவட்டTECSES கிளை மூலம் கடலூருக்கு வெள்ள நிவாரண உதவி































மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுக்கா நன்னிகுப்பம் வடக்கு கிராம மக்களுக்கு, தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பின் (TECSES) கரூர் மாவட்ட கிளை சார்பாக வெள்ள நிவாரண உதவி வழங்க  கரூர்  மாவட்ட டெக்சஸ் கூட்டமைப்பின் இயக்க தோழர்கள் திரு.மணிவேல்  திரு.சுரேஷ் ,  திரு.பாஸ்கர், திரு.கிருபானந்தன், திரு.அயப்பன்,திரு.துரைராஜ்,திரு.வரதராஜன் திரு.சந்திரசேகர்,திருமதி.உமாமகேஸ்வரி திருமதி.மனோரஞ்சிதம் ஆகியோரின் முழு ஒத்துழைப்புடன் TECSES கூட்டமைப்பின் கரூர் மாவட்ட செயலாளர் திரு.சி.சுவாமிநாதன் தலைமையில் பதினான்கு பேர் கொண்ட குழு நன்னிகுப்பம் வடக்கு கிராமத்துக்கு சென்று, ரூ.1.20 இலட்சம் மதிப்புள்ள பாய்,போர்வை, குழந்தைகளுக்கான   துணி,அரிசி,பிஸ்கட், வாழைப்பழம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியது.



இந்நிகழ்ச்சியில் TECSES கூட்டமைப்பின் கரூர் மாவட்ட  தலைவர் திரு.கல்யாணசுந்தரம்,பொருளாளர் திரு.கனகராஜ்,கரூர் சரக தலைவர் திரு.எம்.இரவி ,குளித்தலை சரக தலைவர்  திருமதி.ஆர்.கண்மணி , கரூர் மாவட்ட  டெக்சஸ் குடும்ப நலகுழு தலைவர் திரு.காமராஜ்செயற்குழு உறுப்பினர்திரு.சரவணன் மற்றும் திரு.பிரகாஷ், திரு.மகேந்திரன், திரு.தர்மலிங்கம், திரு.செல்வராஜ், திரு.ராஜேஷ்,திரு.ராஜா, திரு.கோபி, ஆகியோர் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.

TECSES
கூட்டமைப்பின் கடலூர் மாவட்ட செயலாளர் திரு.எஸ்,பரமாத்மா மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள்  திரளாக கலந்துகொண்டு நிவாரண பொருட்கள் வழங்கும் பணி சிறப்பாக அமைய உதவியாக இருந்தனர்.